திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 ஜூலை 2024 (14:27 IST)

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

Anbumani
கள்ளச்சாராயத்தைத் தடுக்க டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்கத் திட்டமா? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
90 மி.லி. மதுவை விற்பனை செய்வதற்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறிய அன்புமணி ராமதாஸ், டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மிலி மதுவை விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனம் முன்வைக்கும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு மீட்டெடுக்க முடியாத கலாச்சார சீரழிவு படுகுழிக்குள் தள்ளப்பட்டு விடும் என்றும் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
 
கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால் தான் அதை நாடி செல்கின்றனர் என்பதற்காக குறைந்த விலையில் சிறிய பாக்கெட்டுகளில் மதுவிற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தான் அன்புமணி ராமதாஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran