ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 ஜூன் 2024 (18:50 IST)

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

Annamalai
அமைச்சர் துரைமுருகன் டாஸ்மாக் குறித்து கூறிய கருத்து உண்மைதான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
நேற்று அமைச்சர் துரைமுருகன் டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை என்பதால் கள்ளச்சாராயத்தை நோக்கி குடிமகன்கள் செல்கிறார்கள் என்று பேசினார். அவருடைய பேச்சுக்கு ஏற்கனவே பொதுச் செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்
 
அமைச்சர் துரைமுருகன் கூறிய கருத்து உண்மைதான் என்றும் டாஸ்மாக் மதுபானம் தரமானதாகவும் இல்லை, கிக்கும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
அண்ணாமலை மற்றும் பிரேமலதாவின் கருத்துக்களுக்கு அமைச்சர் துரைமுருகன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Siva