தொடர்புடைய செய்திகள்
- தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கும் தேர்வுக்குழு… மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?
- தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் சிறை..! ரூ.1 கோடி அபராதம்..! வருகிறது புதிய சட்டம்.!!
- தமிழ்நாடு ஆசிரியர் பணி தேர்வில் தெலுங்கு, உருது மொழிகள்! – அரசாணை வெளியீடு!
- இன்று பட்டதாரி ஆசிரியர் தேர்வு! 130 மையங்களில் 41,000 பேர் எழுதுவதாக தகவல்..!
- சிவகார்த்திகேயன் படத்துக்கு 3 டைட்டில்… கமல் தேர்வு செய்வதே பைனல்!
TANCET, CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலை
TANCET, CEETA நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியின் கால அவகாசத்தை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளில் சேர TANCET நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். மேலும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் போன்ற பொறியியல் படிப்புகளில் சேர CEETA நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்
இந்த நிலையில் 2024- 2025 ஆம் கல்வியாண்டிற்கான TANCET, CEETA நுழைவுத் தேர்வுகளுக்கான ஜனவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை வரும் 12 ஆத் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான இறுதி செமஸ்டர் எழுத உள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
