ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (11:25 IST)

தமிழ்நாடு ஆசிரியர் பணி தேர்வில் தெலுங்கு, உருது மொழிகள்! – அரசாணை வெளியீடு!

assembly
தமிழ்நாட்டில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுகளில் தெலுங்கு, கன்னடம், உருது உள்ளிட்ட மொழிப்பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் உள்ள மாநில பாடத்திட்ட பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு (TET) எழுதி தேர்ச்சி அடையவேண்டியது அவசியம். ஆண்டுதோறும் ஆசிரியர் பணிக்கான இந்த தகுதி தேர்வு நடந்து வருகிறது. இதில் தமிழ் மொழிப்பாடம் முக்கிய தேர்வுத் தாளாக இருந்து வருகிறது. இதுதவிர ஆங்கிலம், கணிதம், அறிவியல் என்று துறை பாடத்தேர்வுகளும் உண்டு.

இந்நிலையில் தற்போது இந்த ஆசிரியர் தகுதி தேர்வில் கூடுதலாக தெலுங்கு, மலையாளம், உருது, கன்னடம் ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளை தாய் மொழியாகவும், முதன்மை பாடமாகவும் கொண்ட சிறுபான்மையினரும் தகுதி தேர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு இந்த மொழிகள் சேர்க்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் மொழிப்பாடங்கள் சேர்ப்பால் தமிழ் மொழி தேர்வு எழுதுவோருக்கு எந்த இடையூறும் இல்லை என்றும், அவர்களுக்கு வழக்கம்போல தேர்வுகள் தமிழ் மொழியிலேயே தொடரும் என்றும் கூறப்படுகிறது.

Edit by Prasanth.K