1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (08:02 IST)

இன்று பட்டதாரி ஆசிரியர் தேர்வு! 130 மையங்களில் 41,000 பேர் எழுதுவதாக தகவல்..!

பள்ளி கல்வித்துறையில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்காக இன்று பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு தமிழகம் முழுவதும்  130 மையங்களில் 41485 பேர் எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் 2582 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதை அடுத்து இந்த காலி இடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு இன்று நடைபெற உள்ளது.

இந்த தேர்வில் தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்கள் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2ல் வெற்றி பெற்றவர்கள் இந்த தேர்வை என்று எழுத உள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

 தமிழகம் முழுவதும் இன்று பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து தேர்வு மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

Edited by Siva