1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (10:11 IST)

எல்.முருகனை சாதி ரீதியாக விமர்சிப்பதா? டி.ஆர்.பாலு மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்..

மத்திய அமைச்சர் எல் முருகன் அவர்களை சாதி ரீதியாக திமுக எம்பி டிஆர் பாலு விமர்சனம் செய்ததாக அவர் மீது தேசிய தாழ்த்தப்பட்ட ஒரு ஆணையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
நாடாளுமன்றத்தின் சமீபத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்பி டிஆர் பாலு பேசிய போது தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி இதுவரை ஒதுக்கீடு படவில்லை என விமர்சனம் செய்தார். 
 
அப்போது மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குறுக்கிட்டு பேச முயன்ற போது அவரை அமரும்படி டிஆர் பாலு கூறினார். இதனை அடுத்து திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது 
 
இந்த நிலையில் நீங்கள் இந்த அமைச்சர் பதவியில் இருக்க தகுதியில்லாதவர் என டிஆர் பாலு பேசியபோது, ஒரு தலித் அமைச்சரை தகுதியற்றவர் என கூறி ஒட்டுமொத்த பட்டியல் இனத்தை அவமதித்துவிட்டதாக பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்
 
இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டவர் ஆணையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் என்ன நடவடிக்கை எடுத்த படம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran