1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu weather and rain chances

6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. 

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
அமெரிக்காவின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி! – நான்காவதாக அனுமதி பெற்ற மாடர்னா!