1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (15:48 IST)

அமெரிக்காவின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி! – நான்காவதாக அனுமதி பெற்ற மாடர்னா!

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பரவும் அபாயம் உள்ள நிலையில் அமெரிக்க தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் சமீபமாக அதிகரித்த நிலையில் அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது. இந்நிலையில் சமீப கால ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் அதிகப்படுத்தப்பட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை தினசரி 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது மூன்றாம் அலை பாதிப்புகள் ஏற்படலாம் என்ற அபாயம் உள்ள நிலையில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.