சிறைக்குள் ஏ.சி, செல்போன்.. முன்னாள் அமைச்சருக்கு பலே கவனிப்பு! – சோதனையில் அம்பலம்!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 29 ஜூன் 2021 (10:51 IST)
பாலியல் புகார் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஏசி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

தமிழ் துணை நடிகை சாந்தினி என்பவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வழக்கு தொடர்ந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை சிறையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் சைதாப்பேட்டை சிறையில் சோதனை மேற்கொண்டபோது மணிகண்டனுக்கு ஏ.சி வசதி, செல்போன் சார்ஜர் வசதிகள் சிறைக்குள்ளேயே ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. இதனால் மணிகண்டனை புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சைதாப்பேட்டை சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :