1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu raining possibilities districts

காத்திருக்குது கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..? – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், கரூர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
போயஸ் கார்டன் வீட்டிற்கு ஆப்பு: சசிகலாவுக்கு அடுத்து சிக்கல்!