வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (11:14 IST)

ஆன்லைன் க்ளாஸ் வெச்சா போதுமா? ஆண்ட்ராய்ட் போன் வேணாமா? – முக ஸ்டாலின் கண்டனம்!

கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக பள்ளி வகுப்புகள் நடத்தப்படும் நிலையில் செல்போன் இல்லாததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வழியாகவும், தொலைக்காட்சிகள் வழியாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செல்போன் வசதி, தொலைக்காட்சி வசதி இல்லாததால் பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடர முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போன் இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு,க.ஸ்டாலின் ”ஆனலைன் வகுப்புகள் தொடங்கும் முன்னரே அனைத்து மாணவர்களிடமும் செல்போன் வசதி உள்ளதா? மாதாமாதம் இணையத்திற்கு பணம் செலுத்தும் அளவு வசதி இருக்கிறதா? ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்கள் எப்படி ஒரே செல்போனில் படிக்க முடியும்? என்பவை குறித்து அரசு முறையாக ஆய்வுகளை செய்யாமல் அலட்சியம் காட்டியதன் விளைவே நித்யஸ்ரீ மரணம்” என குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் தான் ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக பேசவில்லை என கூறியுள்ள அவர் ஆன்லைன் வகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் சென்று சேர சமமான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.