வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (13:02 IST)

ஒரே புழுக்கமா இருக்கே; அதுக்கு விமான இறக்கையில நடக்கணுமா? – பகீர் கிளப்பிய பெண்!

விமானத்திற்குள் வெப்பமாக இருப்பதாக கூறிய பெண் கதவை திறந்து சென்று விமான இறக்கையில் நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுமுறை நாளில் துருக்கி சென்று விட்டு தன் இரண்டு குழந்தைகளுடன் உக்ரைன் வழியாக விமானத்தில் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார் பெண் ஒருவர். அவர் விமானத்தில் துருக்கியிலிருந்து கிளம்பியதிலிருந்தே விமானத்தில் மிகவும் வெப்பமாக இருப்பதாகவும், காற்று வீசவில்லை என்றும் புகார் அளித்து வந்துள்ளார்.

ஆனால் அதை யாரும் பொருட்படுத்தாத நிலையில் விமானம் உக்ரைனின் கிவ் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது எதிர்பாரத விதமாக அவசர கால கதவை திறந்த அந்த பெண் விமானத்தின் இறக்கை மீது வாக்கிங் சென்றிருக்கிறார். பிறகு சாவகாசமாக மீண்டும் அவசர கால கதவு வழியாக தனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் உக்ரைன் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பெண்ணின் அத்துமீறிய செயல்பாட்டின் மீது நடவடிக்கை எடுத்துள்ள உக்ரைன் விமான நிலையம் உக்ரைன் வழியாக பயணிக்கும் எந்த விமானத்திலும் பறக்க அந்த பெண்ணுக்கு தடை விதித்துள்ளது.