கோவிலுக்கு போகணுமா? டோக்கன் வாங்கிட்டு வாங்க! – அறநிலையத்துறை புதிய ரூல்!
தமிழகம் முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அறநிலையத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. 5 மாத காலமாக பூட்டியிருந்த கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து திருத்தலங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் கோவிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த அறநிலையத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையின் பிரதான கோவில்களாக கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் உள்ளிட்ட பிரதான கோவில்களுக்கு தரிசனத்திற்கு செல்பவர்கள் முன்னதாக அறநிலையத்துறையின் தளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து டோக்கன் பெற்று வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள முக்கியமான கோவில்களிலும் கூட்டத்தை கட்டுப்படுத்த இவ்வாறான டோக்கன் நடவடிக்கைகள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.