தொடர்புடைய செய்திகள்
- வியாபார சக்கரவர்த்தி , மனிதநேயர் ஹெச்.வசந்தகுமார்... ஒரு பார்வை
- தமிழகத்தில் இன்று 6,352 பேருக்கு கொரோனா உறுதி ! 87 பேர் பலி !
- தமிழகத்தில் இன்று 5996 பேருக்கு கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?
- நடிப்பு பயிற்சி பட்டறை… விஜய் சேதுபதி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட போஸ்டர்
- பாஜகவுல சேர்ந்த நேரம்... அண்ணாமலை மீது கேஸ்!!
தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தர்மபுரி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான அளவு வரை மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
