திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (16:20 IST)

நடிப்பு பயிற்சி பட்டறை… விஜய் சேதுபதி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட போஸ்டர்

நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விஜய் சேதுபதி தந்து டுவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளார்.

அதில், கூத்துப்பட்டறை ஆன்லைன் நடிப்பு பயிற்சி பட்டறை என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியை நடத்துவது ஜோக்கர் புகழ் குரு சோமசுந்தர் என்றும், செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரை இப்பயிற்சி நடக்கும் எனவும், இரண்டு வகுப்புகள் இந்திய நேரப்படி காலை 8 -10 மணிக்கும் மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை நடக்கும் என தெரிவிக்கப்படுள்ளது. இந்த வகுப்புகள் ஜூம் காணொலியில் நடக்கும் எனவும் தொலைபேசி எண்- 80723 33827 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.