செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (07:51 IST)

ஒரே தேர்வு, ஒரே மொழியை அடுத்து ஒரே வாக்காளர் பட்டியல்: மத்திய அரசின் புதிய திட்டம்

ஒரே நாடு ஒரே தேசம் என்ற கொள்கையை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஒரே தேர்வு, நாடு முழுவதும் ஒரே மொழி, என்ற கொள்கையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த வரிசையில் நாடு முழுவதும் ஒரே வாக்காளர் பட்டியலை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஒரே வாக்காளர் பட்டியல் அனைத்துத் தேர்தல்களிலும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
மக்களவை தேர்தல் முதல் சட்டமன்றத் தேர்தல் வரை ஒரே விதமான வாக்காளர் பட்டியலை பயன்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த ஆலோசனையை அடுத்து கேபினட் செயலாளர்கள் மாநில தலைமைச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே வாக்காளர் பட்டியல் என்ற நடைமுறை வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்கு ஒரேவிதமான வாக்காளர் பட்டியலில் தயாரிப்பதற்கு சட்ட திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்