1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rain chances for tomorrow

தமிழகத்தில் நாளை கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

Tamilnadi
தமிழ்நாட்டில்  நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்ததூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்க திட்டம்..! – முதலமைச்சரை கலங்க வைத்த திரைப்படம்!