பாலியல் புகார்.... பிரபல நடிகரிடம் நாளை விசாரணை
மலையாள சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்பாபு. இவர் மீது ஒரு நடிகை பாலியல் புகார் கூறினார். இதுகுறித்து போலீஸார் விஜய்பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.
அவர் மீது மேலும் சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து விஜய்பாபுவை நீக்க பலரும் கூறி வருகின்றனர்.
எனவே கேரள போலீஸார் நேரில் வந்து ஆஜராகுமாறு விஜய் பாபுவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். மேலும் தான் வெளி நாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், நேரில் வந்து ஆஜராக முடியாது எனவும் 19 ஆம் தேதி வரை தனக்கு அவகாசம் வேண்டும் என போலீஸாருக்கு மெயில் அனுப்பியுள்ளார் விஜய் பாபு.
இதனை ஏற்க மறுத்துள்ள போலீஸார் சர்வதேச போலீஸாருடன் இணைந்து விஜய் பாபுவை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில், வெளி நாட்டில் இருந்தபடி விஜய்பாபு முன் ஜாமீன் கீட்டு மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை கேரளா திரும்பி, விசாரணை அதிகாரிகளின் முன்பு ஆஜராகும்படி உத்தரிவிட்டது.
இந்நிலையில், 39 நாட்களுக்குப் பிறகு விஜய்பாபு இன்று நாடு திரும்பியுள்ளார். எனவே நாளை அவர் விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகிறார்.