திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 மே 2022 (14:32 IST)

கோடையிலும் குளுகுளு மழை; இன்று எங்கெங்கு மழை வாய்ப்பு?

தமிழகத்தில் அக்கினி வெயில் நடந்து வரும் நிலையில் இன்று 16 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 4ம் தேதி அக்கினி வெயில் தொடங்கிய நிலையில் வெயில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்க கடலில் உருவான புயல் காரணமாக பெய்த மழையால் வெப்பம் குறைவாகவே இருந்தது.

தற்போது 28ம் தேதியுடன் அக்கினி வெயில் முடிவடைய உள்ள நிலையில் ஆங்காங்கே வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர், திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், தர்மபுரி, சேலம், திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.