செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 நவம்பர் 2021 (12:52 IST)

தீபாவளிக்கு மகள் வீட்டுக்கு சென்ற பெண்… 130 பவுன் நகைக் கொள்ளை!

திருச்சியில் தீபாவளிக்காக தனது மகள் வீட்டுக்கு சென்ற பெண் திரும்பி வீட்டுக்கு வந்த போது வீட்டில் இருந்த நகை முழுவதும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதிக்கு அருகே உள்ள பெரகம்பியைச் சேர்ந்த தம்பதிகள் அன்பழகன் மற்றும் லதா. அன்பழகன் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் இருக்கிறார். இந்நிலையில் லதா தீபாவளிக்காக சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுள்ளார்.

தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று அவர் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 130 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள், ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வைர தோடு, 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவைக் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து காவலர்களுக்கு தகவல் சொல்லவே அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.