1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 4 dead in tamil nadu due to heavy rain

கனமழை எதிரொலி: தமிழகத்தில் 4 பேர் பலி!

கனமழை எதிரொலி
தமிழ்நாட்டில் மழை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று  அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆறு ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் ஒரே நாளில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமான மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் மழை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று  அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தேனி, மதுரை மாவட்டங்களில் தலா 2 பேர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர். 
 
மேலும் தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash