1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu prepare for election results

நாளை காலை வரை தபால் வாக்குகள் பெறப்படும் – தமிழக தேர்தல் அதிகாரி தகவல்!

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் தபால் வாக்குகள் நாளை வரை பெறப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ல் ஒரே சுற்றில் நடந்து முடிந்த நிலையில் வாக்குகள் எண்ணும் பணி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நேற்று வரை 5,64,253 தபால் வாக்குகள் வரப்பெற்றுள்ளன; நாளை காலை வரை தபால் வாக்குகள் பெறப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் “தபால் வாக்குகளும், வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும்; 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்கு எண்ணும் மையங்கள் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படும்” எனக் கூறியுள்ளார்
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஒரு வாரத்திற்கு பொது ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் உத்தரவு