தடுப்பூசி தட்டுப்பாடு; இன்னும் 2 வாரத்துல வந்திடும்! – மத்திய அரசு விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடுகள் நிலவி வரும் நிலையில் இரண்டு வாரங்களில் கூடுதல் தடுப்பூசி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேவையான ஸ்டாக் கிடைக்காததால் இன்று 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படாது என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கூடுதல் தடுப்பூசிகள் அடுத்த இரண்டு வாரங்கள் கழித்து தமிழகத்திற்கு கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களில் 7.33 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.