வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 1 மே 2021 (15:51 IST)

நடிகர் சூர்யா பட நடிகர் இன்று கொரொனாவால் உயிரிழப்பு

நடிகர் சூர்யா பட நடிகர் இன்று கொரொனாவால் பலியானார்.

இந்தியாவின் உயிரைப் பறிக்கும் கொரொனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது.

இத்தொற்றைக் குறைக்கவும் இதிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது.  ஆனால் மக்களும் அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காதவரை எதுவும் சாத்தியமில்லை என்ற கருத்து மக்களிடம் எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரொனா இரண்டாவது அலையில் தொற்றுக்குச் சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாலிவுட் உலகில் சமீப காலத்தில் சோனுசூட், நீல் நிதின் முகேஷ், மஷிஷ் மல்கோத்ரா, கத்ரினா கைப்,ரன்பீர் கபூர், அவரது காதலி ஆலியா பட் , அமிதாப், அபிஷேக் பச்சன் போன்ற நடிகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பாலிவுட் மூத்த நடிகர் ரந்தீர் கபூர் நேற்று முன் தினம் இரவு  மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனைவில் அனுமதிப்பட்டார்.

தற்போது நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் நடித்திருந்த பிக்ரம்ஜீத் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.  அவரது மறைவுக்கு சினிமாத்துறையினரும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.