1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu make new rules coming from kerala

இனி கேரளாவிலிருந்து வர பிசிஆர் சான்றிதழ் கட்டாயம்! – தமிழக அரசு உத்தரவு!

Tamilnadu
கேரளாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் கேரளாவிலிருந்து தமிழகம் வர இனி ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த மாதத்தில் இரண்டாம் அலை தீவிரமடைந்திருந்த நிலையில் தற்போது வெகுவாக குறைந்தது. இந்நிலையில் தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, ஆகஸ்டு 5 முதலாக கேரளாவிலிருந்து தமிழகம் வருவோர் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதேபோல கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியிருந்தால் சான்றிதழ் காட்டி தமிழகத்திற்குள் வரலாம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தம்: தமிழக அரசு அதிரடி