1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona daily cases drop down under 50 thousand

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! – இன்றைய நிலவரம்

India
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகள் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 41,831  பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,16,55,824 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 541 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,24,351 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,08,20,521 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,10,952 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
உடலின் நச்சுப்பொருட்களை நீக்கக்கூடிய அற்புத பானம் கொத்தமல்லி ஜூஸ் !!