செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (10:11 IST)

உங்க தனிவிமானத்தை குடுங்க.. கர்நாடகா போயிட்டு வறேன்! – தயாநிதி மாறனுக்கு அண்ணாமலை பதில்!

கர்நாடக அணை பிரச்சினையை தீர்க்க அண்ணாமலையை அனுப்புவோம் என எம்.பி தயாநிதி மாறன் பேசியதற்கு பாஜக அண்ணாமலை பதிலளித்து பதிவிட்டுள்ளார்.

கர்நாடகா அரசு காவிரி குறுக்கே அணை கட்ட முயற்சிகள் மேற்கொண்டுள்ளதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் பேசிய திமுக எம்.பி தயாநிதிமாறன் “தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் கூறிய நிலையில் மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம்” என பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “கொரோனா நோய்தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது T 20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக்கொண்டு இருந்த தயாநிதி மாறன் அவர்கள்... மேகதாது அணை பற்றி கவலைப்பட்டமைக்கு மிக்க நன்றி” என கூறியுள்ளார்.

மேலும் “தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு தூது செல்ல நான் தயார் இதை அவர் மாமா திரு. மு.க.ஸ்டாலின் அனுமதிப்பாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.