1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu have rain chances for two days

இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. எனினும் வெப்பசலனம் காரணமாக சில மாவட்டங்களில் மிதமான மழையும் அவ்வபோது பெய்து வருகிறது.

தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஏப்ரல் 29,30ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளிலும், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாக்குமரி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் லெசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

இதேபோல, தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இந்தி பேச தெரியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்: பாஜக அமைச்சர்