ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (10:43 IST)

சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா! – மொத்த பாதிப்பு 182 ஆக உயர்வு!

சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்றும் புதிதாக 11 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில் சமீப காலமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முக்கியமாக சென்னை ஐஐடியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

தற்போதைய நிலவரப்படி புதிதாக மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 182 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் ஐஐடியில் அதிகமாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.