திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (14:03 IST)

இந்தி பேச தெரியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்: பாஜக அமைச்சர்

up minister
இந்தி பேச தெரியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்: பாஜக அமைச்சர்
இந்தி பேசத் தெரியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என உத்தரப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
கடந்த பல ஆண்டுகளாக இந்திக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது
 
 சமீபத்தில் அஜய்தேவ் கான் ஹிந்தி தேசிய மொழி என்று கூறியதற்கு ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகம் கண்டனம் தெரிவித்தது
 
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் என்பவர் இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.