1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tamilisai soundarajan said vijay votes has zero value

விஜய் 15% ஓட்டு வாங்கினாலும் அது ஜீரோதான்!.. தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!...

Tamilisai Soundarrajan
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெறும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி கூட தவெக தனித்து நின்றாலே 18 சதவீத வாக்குகளை வாங்கும் என சொல்லியிருந்தார். அவர் மட்டுமில்லாமல் மற்ற பல ஊடகங்களும் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜயின் தவெக 19.2 சதவீத வாக்குகளை வாங்கும் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்..

ஒருபக்கம் விஜய் அதிமுக -  பாஜக கூட்டணியில் இணைந்தால் மட்டுமே அவர் வாங்கும் வாக்குகளுக்கு ஒரு பலன் உண்டு. இல்லையென்றால் அந்த ஓட்டுக்கள் வீணாக போகும். விஜய் திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரிப்பது திமுகக்கு சாதகமாகவே முடியும் என அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ‘விஜயிடம் இருப்பது நிரூபிக்கப்படாத வாக்குகள் மட்டுமே.. அவர் 15 சதவீத வாக்குகளை வாங்கினாலும் அது பூஜ்ஜியம்தான்.. இன்னொரு கூட்டணியுடன் அவர் சேர்ந்தால் அது மாறும்.. இது நான் மட்டுமல்ல.. அரசியலில் அனுபவம் வாய்ந்த பலருடைய கருத்து’ என்று கூறியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? வைகோ சொன்ன பரபரப்பு கருத்து..!