1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilandu Govt announced to extend lockdown to march

நீட்டிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு! தளர்வுகள் என்ன? – தமிழக அரசு அறிவிப்பு!

Tamilnadu
கொரோனா காரணமாக தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரொனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் மாதம்தோறும் ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி தமிழகம் முழுவதும் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்கலாம். தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் நடந்து வரும் நிலையில் பிப்ரவரி 8 முதலாக 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அதிமுக கொடியுடன் எண்ட்ரி கொடுத்த சசிக்கலா! – அதிர்ச்சியில் அதிமுக!