செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 ஜனவரி 2021 (12:09 IST)

எம்ஜிஆர் என் பெரியப்பா.. எடப்பாடியார் பக்கத்துல கூட போயிருக்க மாட்டார்! – புது ரூட் பிடிக்கும் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசுகையில் ”எம்ஜிஆர் எனக்கு பெரியப்பாவாக இருந்து கல்வி உள்ளிட்ட பலவற்றில் பங்காற்றினார். முதல்வர் பழனிசாமி என்றாவது எம்ஜிஆரை அருகில் சென்றாவது பார்த்ததுண்டா?” என பேசியுள்ளார்.

சமீபத்தில் கமல்ஹாசன் தொடர்ந்து எம்ஜிஆர் உருவகத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது மு.க.ஸ்டாலினும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.