தொடர்புடைய செய்திகள்
- உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் நெல்லிக்காய் !!
- இந்த இலைகளை கொண்டு விநாயகரை அர்ச்சிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- இறந்த தாயின் உடலை 10 ஆண்டுகள் ஃப்ரிட்ஜில் வைத்திருத்த ஜப்பான் பெண் கைது
- 12ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பாஜக பிரமுகர் கைது
- குகையில் வாழும் சாமியார் ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நன்கொடை
போலியோ சொட்டுமருந்து முகாம்! தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்கள் அமைப்பு!
கொரோனா பாதிப்புகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
Polio
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்ட நிலையில் இன்று இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் சொட்டு மருந்து வழங்கப்படுவதுடன், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், சோதனை சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளிலும் சொட்டு மருந்து முகாம் ஏற்படுத்தப்பட்டு சொட்டுமருந்து வழங்கப்படுகிறது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டுமென சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
