வியாழன், 29 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (12:27 IST)

தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் திருட்டு: திமுக அலுவலக திறப்பு விழாவில் நடந்த அசம்பாவிதம்!

தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் திருட்டு: திமுக அலுவலக திறப்பு விழாவில் நடந்த அசம்பாவிதம்!
டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவின் போது திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் விலையுயர்ந்த செல்போன் திருடு போய்விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
டெல்லியில் நேற்று திமுக அலுவலக திறப்பு விழா நடைபெற்றது என்பதும் இந்த அலுவலகத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது தெரிந்ததே 
இந்த திறப்பு விழாவில் சோனியா காந்தி உள்பட பல முக்கிய அரசியல்வாதிகள் வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் விலையுயர்ந்த செல்போன் திருடு போய்விட்டது
 
இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, காவல்துறையில் புகார் செய்ய இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்