வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (12:07 IST)

யார் காலிலும் விழ டெல்லி செல்லவில்லை! – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

முதல்வரின் டெல்லி பயணம் குறித்து எதிர்கட்சிகள் விமர்சனம் செய்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்கள் முன்னதாக 3 நாட்கள் சுற்று பயணமாக டெல்லி சென்று அங்கு பிரதமர் மோடி மற்றும் பல அமைச்சர்களை சந்தித்து தமிழகத்திற்கான கோரிக்கைகள், நிதியை விடுவித்தல் ஆகியவை குறித்து பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத்தையும், துபாய் பயணத்தையும் விமர்சித்து எதிர்கட்சிகள் பேசி வந்தன. இந்நிலையில் இன்று அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “யார் காலிலும் விழுவதற்காக நான் டெல்லி செல்லவில்லை. தமிழகத்தின் உரிமைக்காகவே சென்றேன். ஏனெனில் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நான் துபாய் பயணம் சென்றது குறித்து எதிர்கட்சி தலைவர் கற்பனையாக பல விஷயங்களை பேசி வருகிறார். அவருக்கு உரிய பதிலை கூட்டணிக்கட்சி தலைவர்கள் அளித்துவிட்டதால் அதுகுறித்து மேலும் பேசத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.