தொடர்புடைய செய்திகள்
- பிளே ஆஃபுக்கு செல்ல இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு – சாதிக்குமா சென்னை?
- இனி இந்த போஸ்டர்கள் எல்லாம் வைக்கக் கூடாது… பேருந்துகளுக்கு திடீர் கட்டுப்பாடு!
- 7வது, 8வது இடங்களுக்கு தள்ளப்பட்ட சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல்:
- அடுத்த ஐந்து போட்டிகளும் பெரிதானவை: சாம் கர்ரன் டுவீட்
- 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் தமிழகத்தில் கனமழை!
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை!
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபநாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர், புதுவை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
