புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 19 அக்டோபர் 2020 (08:45 IST)

அடுத்த ஐந்து போட்டிகளும் பெரிதானவை: சாம் கர்ரன் டுவீட்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற 9 போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி, அடுத்து வரும் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது
 
டெல்லி, மும்பை பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்துள்ள நிலையில் இந்த நான்கு இடங்களுக்குள் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் சென்னை அணி அதிக ரன் ரேட்டில் அடுத்து வரும் ஐந்து போட்டிகளிலும் வெல்லவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான சாம் கர்ரன், தனது டுவிட்டரில் அடுத்து வரும் ஐந்து போட்டிகளும் பெரிதானவை என்றும் நாங்கள் தொடர்ந்து போராடி அந்த போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் 
 
சாம் கர்ரன் குறிப்பிட்டது போல் அடுத்த ஐந்து போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்று முதல் 4 இடங்களுக்குள் செல்லுமா? பிளே ஆப் சுற்றில் இடம்பெறுமா?  என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
 
இந்த நிலையில் நேற்று பஞ்சாப் அணி வெற்றியின் காரணமாக அந்த அணி ஆறாவது இடத்திற்கு முன்னேறியது என்பதும், இதனால் ஏழாவது மற்றும் எட்டாம் இடங்களில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தள்ளப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது