1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2020 (13:24 IST)

இந்த சாணி சிப்ல அவ்ளோ பவர் இருக்கா..? ஆதாரம் காட்டுங்க! – 600 விஞ்ஞானிகள் எழுப்பிய கேள்வி!

மாட்டு சாணத்தால் தயாரிக்கப்பட்ட சிப்பில் கதிர்வீச்சை தடுக்கும் சக்தி உள்ளதாக பேசிய காமதேனு ஆயோக் தலைவருக்கு 600 விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பியுள்ளனர்.

மத்திய அரசின் ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் வல்லபாய் கதிரியா சமீபத்தில் மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட சிப் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த சிப் கதிரியக்கத்தை கட்டுப்படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து வல்லபாய் கதிரியாவிற்கு விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், கல்வியல் வல்லுனர்கள் உட்பட மொத்தம் 600 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அதில் இந்த மாட்டுசாண சிப்பை தயாரித்த விஞ்ஞானிகள் யார்? இது அறிவியல்பூர்வமாக யாரால் நிரூபிக்கப்பட்டது? உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டுள்ளனர்.