திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 19 அக்டோபர் 2020 (08:51 IST)

7வது, 8வது இடங்களுக்கு தள்ளப்பட்ட சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல்:

7வது, 8வது இடங்களுக்கு தள்ளப்பட்ட சென்னை-ராஜஸ்தான் இன்று மோதல்:
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் நடைபெற்ற போட்டியில் சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது. புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள மும்பை அணிக்கு இந்த தோல்வியால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் நேற்றைய வெற்றியால் பஞ்சாப் அணி எட்டாவது இடத்தில் இருந்து திடீரென 2 இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்திற்கு சென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பஞ்சாப் அணியின் இந்த அபார வெற்றி காரணமாக சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களுக்கு தள்ளப்பட்டன. இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களில் டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் உள்ளன. ஐதராபாத், பஞ்சாப், சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் ஐந்து முதல் எட்டாவது இடங்களில் உள்ளன
 
எனவே இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு சென்று விடும் என்பதும், அந்த அணிக்கு பிளே ஆப் சுற்றில் விளையாட வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வாய்ப்பை சென்னை அணி தக்க வைத்து கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்