1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain till august 3rd

ஆகஸ்ட் 3 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம்
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 3 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
இது குறித்து வானிலை ஆய்வு மையம் விரிவாக தெரிவித்துள்ளதாவது, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல ஆகஸ்ட் 1,2,3 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
 
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். அதோடு சென்னையை பொருத்த வரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.