இதுக்குமேல ஸ்டெர்லைட்ல ஆக்ஸிஜன் உற்பத்தி அவசியமில்லை – தமிழக அரசு வாதம்!
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி கோரி முறையிட்டுள்ள நிலையில் தமிழக அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், அவசர தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் தற்போது ஆக்ஸிஜனுக்கான தேவைகள் குறைந்துள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு கூறியுள்ள நிலையில் தொடர்ந்து ஸ்டெர்லைட் இயங்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணையில் பதிலளித்துள்ள தமிழக அரசு தற்போது ஆக்ஸிஜனுக்கான தேவை குறைந்துள்ளதால் ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய வேண்டிய தேவையில்லை என வாதிட்டுள்ளது.