1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Newyork give 100 dollars for vaccination

மூன்றாவது அலை ஆபத்தில் அமெரிக்கா; தடுப்பூசி போட்டால் 100 டாலர்! – மேயர் அறிவிப்பு!

World
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டு கொண்டால் 100 டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சமீபத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமீபத்தில் குறைந்தது. இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மூன்றாம் அலை பாதிப்புகள் தொடங்கும் முன்னதாக தடுப்பூசி செலுத்துதலை விரைவுபடுத்த அமெரிக்க மாகாணங்கள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் நியூயார்க் மாகாணத்தில் தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு 100 டாலர் வழங்கப்படும் என அம்மாகாண மேயர் அறிவித்துள்ளார். முன்னதாக தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு அமெரிக்காவில் பீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தகக்து.
அடுத்த கட்டுரையில்
ஆகஸ்ட் 3 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு