1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை

தமிழகம்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தகவல். 

 
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.