வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (22:46 IST)

6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை மையம் கூறியுள்ள அந்த ஆறு மாவட்டங்களாவன: கிருஷ்ணகிரி, சேலம், காஞ்சிபுரம், தருமபுரி, சென்னை உள்ளிட்ட  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.