திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (00:00 IST)

எடையை குறைக்க இதைக் கடைப்பிடிங்க

சிட்ரஸ் பழங்களில் எலுமிச்சை உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி  சருமத்தை அழகுறச் செய்யவும் உதவியாக உள்ளது.
 
உடல் எடை மற்றும் அழகைப் பாராமரிப்பதற்கு எலுமிச்சை ஜூஸை மட்டும் குடிக்காமல் உண்ணும் உணவிலும்  எலுமிச்சையை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.
 
எலுமிச்சை டயட்டில் இருக்கும்போது, கொழுப்புக்களை சிட்ரஸ் பழங்களாலான பழச்சாறுகளை அதிகம் பருக வேண்டும். இதனால் உடல் சுத்தமாவதோடு, வயிறும் நிறைந்திருக்கும்.
 
தேனில் ஆண்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதோடு, கொழுப்பைக் குறைக்கும் பொருளும் அதிகம் உள்ளது. எனவே இதனை  சாப்பிடுவது நல்ல பலனை தரும்.
 
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில், தேன் சேர்த்து குடித்து வந்தால், உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.
 
எடையை குறைக்க நினைக்கும் போது, அதிகப்படியான நீர்பானங்களை குடிக்க வேண்டியிருக்கும். அதற்காக எப்போதுமே ஜூஸ் குடிக்க முடியாது, ஆகவே சூடான எலுமிச்சை சூப் சாப்பிட்டால், புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.