வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (14:07 IST)

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் இன்று மழை குறித்த விபரங்களை தினந்தோறும் அறிவித்து வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 2 ஆம் தேதி வரை மேற்கு திசை காற்றின் வேகமாறுபட்டால் கனமழை தொடரும். 
 
ஜூலை 3,4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காரணப்படும், ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.