1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 29 ஜூன் 2022 (19:26 IST)

தமிழகத்தில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம்: எந்த நகரில் தெரியுமா?

Nirmala
ஜிஎஸ்டி கூட்டம் நேற்றும் இன்றும் சண்டிகர் நகரில் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
அது மட்டுமின்றி பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படுவதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் தமிழகத்தில் நடைபெறும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்முறையாக ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற உள்ளது என்றும் தமிழகத்தில் மதுரை நகரில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மதுரை நகர மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்