வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (17:15 IST)

பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘பொய்க்கால் குதிரை’… இமான் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

கோலிவிட்டில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமன இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தில் படங்கள் வெற்றிபெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகிவரும் பொய்க்கால் குதிரை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை இருட்டறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் P ஜெயக்குமார் இயக்க, இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் இசை உரிமையை MRT Music நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை இசையமைப்பாளர் டி இமான் அறிவித்துள்ளார்.