1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (10:26 IST)

திடீரென தீப்பிடித்த சொகுசு பஸ்; அலறியடித்து ஓடிய பயணிகள்!

Bus Fire
தூத்துக்குடியிலிருந்து கோயம்புத்தூர் சென்ற சொகுசு பேருந்து ஒன்று நடுவழியில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது. பேருந்து ஒட்டாப்பிடாரம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் முன்பக்கத்திலிருந்து புகை அதிக அளவில் வெளிவரத் தொடங்கியுள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனே பேருந்தை நிறுத்தி பயணிகளை இறங்க சொல்லியுள்ளார். இதனால் பீதியடைந்த பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடியுள்ளனர். உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை விரைந்து அணைத்துள்ளனர். ஆனால் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.